Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிக்கு சவால் விடும் தினகரன் தரப்பு!

''எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் இரு தரப்பும் இணைந்து, அவர்களின் பெரும்பான்மையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் சவால் விட்டிருக்கிறார்.

எடப்பாடி

தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க அணிகள் இணைந்தது, டி.டி.வி.தினகரன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை எதிரணியினர் வளைக்காமல் இருக்க, புதுச்சேரி ரிசார்ட்டில் 19 எம்.எல்.ஏ-க்களை தங்கவைத்தது தினகரன் தரப்பு.

resort

இன்று, மூன்றாவது நாளாக ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் கைப்பந்து, நீச்சல், ஊஞ்சலாட்டம் எனப் பொழுதைக் கழித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன், ”பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் எங்களைத் தவறாக சித்தரிக்கின்றன.

resort
 

அது தேவையில்லாத ஒன்று. நாங்கள், எங்களது ஒற்றுமையைக் காண்பிக்கத்தான் புதுச்சேரியில் மூன்று நாள்கள் தங்க வந்திருக்கிறோம். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கையை வைத்திருக்கிறோம். நீங்களும் பொருத்திருந்துபாருங்கள், விரைவில் நல்ல செய்தி வரும். கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை நீக்கினால், அவர்கள் துணிச்சலானவர்கள். அப்படிக் கூட்டினால், அதிகப் பெரும்பான்மையை அவர்கள் காட்ட வேண்டும்.

எடப்பாடி-பன்னீர்செல்வம் இரு தரப்பையும் இணைந்து, பெரும்பான்மையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். அப்போதுதான், கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். இன்று எங்களைச் சந்திக்க டி.டி.வி. தினகரன் ரிசார்ட் வர இருக்கிறார். நாங்கள் எடுத்த சபதத்தை  மிக விரைவில் முடித்துக் காட்டுவோம்’ என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close