Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விரைவில் தகுதி நீக்கம்- கொறடா ராஜேந்திரன் அதிரடி!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக அரசுக் கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொறடா ராஜேந்திரன்

அ.தி.மு.க-வில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே, ஓ.பி.எஸ் - ஈ.பி-எஸ் இணைந்ததால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். பின்னர், அவர்கள் புதுச்சேரியில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுக் கொறடா ராஜேந்திரன், "முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 19 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளேன். 19 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். கட்சித் தாவல் தடைச்சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொறாடா அனுமதி இல்லாமல் ஆளுநரைச் சந்தித்து கட்சிக்கு எதிரான ஒரு செயல். எனது பரிந்துரையை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், விரைவில் 19 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விஷயத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் " என்று கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close