Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தினகரன் நல்லவர்தான்... ஆனால்...’ - ராஜன் செல்லப்பா பளீச்!

 "என்னை நீக்க சிறையில் இருக்கும் சசிகலாவிடம் எப்படி ஒப்புதல்பெற்றார் தினகரன்" என்று ராஜன் செல்லப்பா கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பாவை அப்பொறுப்பிலிருந்து நீக்கியதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அவருக்கு மாற்றாக முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரனை நியமித்தார். 

இந்த நிலையில் இன்று மதுரையில் புறநகர் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டத்தை கூட்டியவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, "அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணி வகுத்தோம். சசிகலா பொதுச்செயலாளராக செயல்பட முடியாத சூழல் நிலவுவதால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ளோம். அண்ணன் ஓபிஎஸ்ஸும் நம்மோடு இணைந்துவிட்டார். இந்த நிலையில் என்னை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார். அவர் நல்லவர், ஈகைக்குணம் உள்ளவர். அவர் சிறையிலிருந்தபோது நானும் சென்று பார்த்தேன். மறுக்கவில்லை. தற்போது என்னை, தற்காலிக பொதுச்செயலாளர் ஒப்புதலோடு நீக்கியதாக கூறியுள்ளார். சிறையில் இருக்கும் அவரிடம் எப்படி ஒப்புதல் வாங்கினார் என்பதை தெரிவிக்க வேண்டும்" என்றார்.​​​​​

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close