Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’செல்லாது செல்லாது...!’ - கொறடாவுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதில்

கொறடாவின் பரிந்துரை மிரட்டும் வகையில் உள்ளதாகவே நினைக்கிறேன் என்று டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

vetrivel

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததையடுத்து, டி.டி.வி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்டனர். ’பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக’ தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநருக்கு கடிதம் அளித்தனர்.  தற்போது 19 பேரும் புதுச்சேரியில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுக் கொறடா ராஜேந்திரன், ’முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 19 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைத்துள்ளேன். 19 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவர். கட்சித் தாவல் தடைச்சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொறாடா அனுமதி இல்லாமல் ஆளுநரைச் சந்தித்து கட்சிக்கு எதிரான ஒரு செயல். எனது பரிந்துரையை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், விரைவில் 19 எம்.எல்.ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விஷயத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் " என்று கூறினார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் ’கொறடாவின் பரிந்துரை எம்.எல்.ஏ-க்களை மிரட்டும் வகையில் உள்ளதாகவே நினைக்கிறேன். அவரின் பரிந்துரை சட்டபடி செல்லாது’ என்று குறிப்பிட்டுள்ளார்

புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள டி.டி.வி. எம்.எல்.ஏ-க்கள், தங்க தமிழ்செல்வன் தலைமையில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, “அரசு கொறடாவின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியது. அதனால் அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டிருக்கிறோம். அரசு கொறடா உத்தரவை மீறி நாங்கள் சட்டப்பேரவையில் செயல்பட்டிருந்தாலோ அல்லது மாறி வாக்களித்தாலோதான் அவரால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும். இதற்கு எப்படி அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்? நாங்கள் 19 எம்.எல்.ஏக்கள் இணைந்திருப்பதையே அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஸ்லீப்பர் செல் போலஅந்த பக்கம் 50 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அவர்கள் எங்களுடன் சேரக்கூடாது என்ற குருட்டு சிந்தனையில் பகிரங்கமாக மிரட்டிப் பார்க்கிறார்கள். மேலும், நாங்கள் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறோம்.

இதில் கட்சித் தாவல் எங்கே இருந்து வந்தது. சட்டப்பேரவையில் தனியாக பிரிந்து செயல்பட்டு, ஊழல் அரசு என்று விமர்சித்த ஓ.பி.எஸ் அணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட கொறடா மீது வழக்கு தொடருவோம். அரசுக்கு எதிராக ஊழல் புகார் கூறி செயல்பட்டு பிரிந்து சென்ற ஓபிஎஸ்ஸை அழைத்து துணை முதல்வர் பதவியைத் தருகின்றனர். நாங்கள் இழந்த உரிமைகளை மீட்கக் காத்திருக்கிறோம். கொறடா அளித்த நோட்டீஸ் குறித்து எங்களுக்கு கவலையில்லை. வெறும் ஒன்பது எம்.எல்.ஏக்களை மட்டும்தான்ஓ.பி.எஸ் வைத்திருந்தார். அதனால்தான் 19 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் எங்கள் தரப்பைப் பார்த்து அவர்கள் கண்ணை உறுத்துகிறது" என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close