Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படவில்லை. இதையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார். சமீபகாலமாக பேரறிவானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு சற்று முன் பிறப்பித்து, வேலூர் சிறைக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப்பின் பரோலில் வருகிறார் பேரறிவாளன்.

இதைத்தொடர்ந்து, ஒரு சில மணி நேரத்தில் பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

இதனிடையே, பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் மற்றும் தமிழ் தேசிய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close