Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!

சிவகங்கை அருகே மேலச்சாலூரில் குடும்பப்பிரச்சனை மற்றும் வறுமை  காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது .

 

சிவகங்கை அருகே மேலச்சாலூரை சேர்ந்தவர் விவசாயி முருகன். விவசாய பணிகளை பார்த்து வந்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் இருந்ததாகவும்,  உறவினர்களும் உதவாதநிலையில் விரத்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இடைஇடையே மருத்துவ செலவுக்கு கூட பணம்இல்லாமல் வறுமையில் இருந்துள்ளார். இன்று மேலூர் மருத்துவமனைக்கு சென்று வருவதாக குடும்பத்துடன் சென்றவர்கள், மேலச்சாலூரை அடுத்துள்ள பாப்பாக்குடி கண்மாய்க்கு சென்று விஷம் அருந்தி தற்கொலை  செய்து கொண்டனர். இதில் விவசாயி முருகன்(31) அவரது மனைவி சாந்தி(27) மற்றும்  மகள் ரித்திகா(1) ஆகிய முன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலிஆனார்கள். 3 வயது மகன் ரிஷிவந்த் ஆபத்தான நிலையில் மீட்கபட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப்பிரச்னை மற்றும் வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் மேலச்சாலூர் கிராமத்தை சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close