Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேரறிவாளனின் பரோலை ரத்து செய்யக்கோரி செல்போன் டவரில் ஏறி வக்கீல் தற்கொலை மிரட்டல்!

பேரறிவாளனுக்கு தமிழக அரசு வழங்கிய பரோலை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் செல்போன் டவரில்  ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

perarivalan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு தமிழக அரசு நேற்று  ஒரு மாத பரோல் வழங்கியது. இதையடுத்து, பேரறிவாளன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்யக்கோரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அய்யலுசாமி கோவில்பட்டி இலுப்பையூரணியில் உள்ள தனியார் நிறுவன செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். கண்ணில் கறுப்பு துணி கட்டி கையில் காங்கிரஸ் கொடியுடனும், தூக்குக் கயிறுடனும்  தற்கொலை மிரட்டல் விடுத்தபடி நின்று கொண்டுள்ளார். 

              
''பேரறிவாளனின் பரோல் ரத்து செய்யப்பட்ட செய்தி வந்தபின்தான் கீழே இறங்குவேன்' எனச் சொல்லி அய்யலுசாமி மிரட்டல் விடுத்துள்ளார். போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் துனைத்தலைவர் ராகுல்காந்தி பார்வையிடச் சென்றபோது அவரது கார் மீது கல் வீசித் தாக்குதல் ஏற்படுத்திய சம்பவம் நடந்தபோது இதே செல்போன் டவரில் ஏறி நின்று கொண்டு பிரதமர் மோடியைக் கைது செய்யக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close