Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவேகம் ஃபிளக்ஸ் வைப்பதில் தகராறு - ஆயுதங்களால் மோதிக்கொண்ட ரசிகர்கள்

'விவேகம்' படம் ஃபிளக்ஸ் வைப்பதில் ரசிகர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதில் ஒருவர் வெட்டுப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நடராஜா சினிமா திரையரங்கில் அஜித் நடித்த 'விவேகம்' படம் வெளியானது. ஒவ்வொருமுறையும்  படம் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் ஃபிளக்ஸ் போர்டுகள் வைப்பதும், பால் அபிசேகம் செய்வதும், உயரமான மாலை அணிவிப்பதும், தீப ஆராதனை செய்தும் ஆர்ப்பரிப்போடு ரசிகர்கள் நடந்துகொள்வார்கள். இவை படம் ரிலீஸான முதல் நாள் நடக்கும் கூத்து.

அந்த வகையில் சிவகங்கை அருகேயுள்ள உஞ்சனைக் கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம். இவர் அழகப்பா கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவருக்கும் அஜித் என்பவருக்கும் விவேகம் படம் ஃபிளக்ஸ் வைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. படம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் ராஜலிங்கத்தையும் சங்கரையும், அஜித், விஜய் போன்றவர்கள் வாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் காரைக்குடி முழுவதும் பரவியது. உடனே காரைக்குடி தெற்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தார்கள். வெட்டுப்பட்ட ராஜலிங்கம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். பாதிக்கபட்டவர் உஞ்சனைக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் பழிக்குப் பழி நடக்கலாம் என்கிறது போலீஸ் தரப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close