Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விநாயகர் சதூர்த்தி வியாபாரத்தால் களை கட்டிய மதுரை!

விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் மக்கள் இன்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். விநாயகருக்கு பிடித்தமான  மோதகம், அதிரசம், அப்பம், பிட்டு, அவல், சுண்டல் என வகைவகையான பதார்த்தங்கள், அலங்காரங்களை செய்து அவரை மகிழ்விக்கிறார்கள். இதனால், நகரங்களில் திருவிழா வியாபாரம் களை கட்டியது. 
 

vinayagar

மதுரையில் வழக்கமான சந்தைப்பகுதிகள் மட்டுமில்லாமல், சாலையோரங்கள், தெருக்கள், சந்துகள் என எல்லா  மாநகரின் அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கான திடீர் கடைகள் தோன்றின. கிராமப்புற மக்கள்தான் இந்த வியாபாரத்தை நடத்துகின்றனர்.

அச்சில் வார்த்த களிமண் விநாயகர் முதல், செராமிக் விநாயகர், அலங்கார குடை, வாழைக்கன்றுகள், அருகம்புல்லையும், விநாயகருக்கு அணிவிக்கப்படும், புன்னை,மந்தாரை, மகிழம்,அரளி, பாதிரி, தும்பை, ஊமத்தை,சம்பங்கி, மாம்பூ, முல்லை,தாழம்பூ,  கொன்றை,இருக்கு, வில்வம்,பவளமல்லி, சாதிமல்லி, மாதுளம் பூக்கள் என அறியவகையான பூக்களை மக்கள் வாங்கி சென்றனர். 

கடைகளில் விற்கப்பட்டாலும், விநாயகருக்கு படைக்கப்படும் பதார்த்தங்கள் அனைத்தையும்  வீடுகளில் செய்வதையே பெருமையாக நினைக்கிறார்கள் மக்கள். விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டத்தில் மதுரை களை கட்டியுள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close