Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நாங்க ரெடி!' - ஸ்டாலினுக்கு அ.தி.மு.க அமைச்சர் பதிலடி

'ஸ்டாலின், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்' என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் சில நாள்களுக்கு முன்பு இணைந்தன. இருப்பினும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்' என்று கூறி ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர், 'ஸ்டாலின், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் துணிச்சலுடன் எதிர்கொள்வோம். 19 எம்.எல்.ஏ-க்களும் எந்த நேரத்திலும் இயக்கத்தில் இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எந்த நேரத்திலும் எந்தத் தீர்மானத்தையும் எதிர்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close