Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசி வழங்கும் கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள்!

 ஆசி வழங்க வேண்டிய விநாயகரின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து வழிபட்டிருக்கிறார்கள் விநாயகரின் பக்தர்கள்.

ஆசி வழங்கும் கைகளில் ஆயுதம் ஏந்திய விநாயகர்


இந்துக்களின் முழு முதற்கடவுளாகக் கொண்டாடப்படுபவர் விநாயகர். எதைச் செய்தாலும் பிள்ளையார் சுழி போட்டோ அல்லது பிள்ளையாரைப் பிடித்து வைத்தோ நல்ல காரியங்களைச் செய்வது அவர்களின் வழக்கம். அவரின் பெயரில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

சதுர்த்தியை முன்னிட்டு குக்கிராமம் முதல் பெரும் நகரங்கள் வரை பாகுபாடு இன்றி தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி விநாயகரது உருவங்களைப் பல வண்ணங்களில் சிலையாக வடித்து வழிபாடு செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமைதியைத் தரக்கூடிய, பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கக்கூடிய விநாயகரின் விரல்களில் வீச்சரிவாளையும் வெடிகுண்டையும் கொடுத்து சாந்தமான சாமியை, வெறிகொண்ட ஆசாமியாக உருவகப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக அநீதிகளை எதிர்த்து போராடும் கிராம தெய்வங்களாக வணங்கப்படும், காளி, பராசக்தி, அய்யனார், முனியசாமி சிலைகள் அதன் கரங்களில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், அமைதி விரும்பியான விநாயகரின் கரங்களுக்கு இவை ஏன் இடம் பெற்றது எனத் தெரியவில்லை.

 ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகருக்கு 2 அடி முதல் 20 அடி வரை சிலைகள் அமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ஒன்றின் கரத்தில் வீச்சரிவாளைப் பிடித்தபடி நிறுத்தியுள்ளனர். மற்றொரு விநாயகரின் கரங்களில் பொம்மை எந்திரத் துப்பாக்கியைக் கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் மேலாக அந்த விநாயகரின் மற்றொரு கரத்தில் வெடிகுண்டையும் கொடுத்தபடி சிலைகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

வீச்சருவாள் விநாயகர்


 விநாயகரை வழிபட செல்லும் நமக்குத் தெரியும் இவை பொம்மைத் துப்பாக்கி, வெடிகுண்டு என. ஆனால், விழாக்கள் என்றாலே துள்ளிக் குதித்து முன்னே நிற்கும் சின்னஞ்சிறுவர்களுக்குத் தெரியுமா. அன்பையும் அமைதியையும், ஆசியையும் வழங்குபவர் கடவுள் எனப் பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் நாம் அந்தத் தெய்வங்களை ஆயுதமேந்துபவர்களாகச் சித்திரித்துக் காட்டுவது வருங்காலத் தலைமுறையை நல்வழியில் நடத்த எப்படி உதவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close