Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வரை மாற்ற தினகரன் பேரவையினர் ஆர்ப்பாட்டம் 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், டி.டி.வி.தினகரன் பேரவை என்ற அமைப்பினர்  மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை அனுப்பானடி கேட்லாக் சாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேரவையின் மாநகர் மாவட்டச் செயலாளர் பாலகுமார் தலைமை தாங்கினார்.  மாவட்ட பிரதிநிதிகள் பார்த்தசாரதி, கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். அ.தி.மு.க-வை  டி.டி.வி தினகரன் தலைமையேற்று நடத்த வேண்டும். அவர் கைகாட்டுகிற ஆளே முதல்வராக வர வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறைந்த அளவிலான ஆட்களை வைத்துக்கொண்டு தினகரனுக்கு ஆதரவாக அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

டிடிவி பேரவை

சில நாள்களுக்கு முன்  இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க காரணம் என்னவென்று கேட்டு  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பும் போராட்டத்தை இவர்கள் நடத்தினார்கள். இந்த நிலையில், இன்று முதல்வரை மாற்ற வேண்டுமென்று போராட்டம் நடத்தியுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close