Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகேந்திரகிரி ‘இஸ்ரோ’ மையத்தின் மீது பறந்த மர்ம விமானம்!

இஸ்ரோ ராக்கெட்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தின் மீது சிறிய ரக கிளைடர் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் திரவ இயக்க உந்தும வளாகம் அமைந்துள்ளது. இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய சக்தி வாய்ந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் என்ஜின் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணிகள் இந்த மையத்தில் நடக்கின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் பாதுகாப்பில் இந்த மையம் உள்ளது.

 
உலக அரங்கில் ராக்கெட் தொழில் நுட்பத்தில் இந்தியா சிறப்பாகச் செயல்படுவதுடன் பல்வேறு வெளிநாடுகளின் செயற்கைக்கோள் அடங்கிய ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. இந்தநிலையில், இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மகேந்திரகிரி மலையில் அடிக்கடி அந்நியர்கள் ஊடுருவும் சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கெனவே பல முறை மனநிலை பாதிக்கப்பட்ட வடநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த மையம் அமைந்துள்ள மலையில் பிடிபட்டுள்ளனர்.

இஸ்ரோ மகேந்திரகிரி

அடிக்கடி ஆள் இல்லாத விமானம் பறப்பது. அனுமதி இல்லாமல் இந்த மையத்தின் மீது ஹெலிகாப்டர் பறப்பது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த மையம் மீது சிறிய ரக கிளைடர் விமானம் வட்டமடித்துள்ளது. இதுகுறித்து மையத்தின் அதிகாரிகள் பணகுடி காவல்நிலையத்தில் புகார்செய்துள்ளனர். இதுபற்றி பேசிய இஸ்ரோ மைய அதிகாரிகள், ’’அடிக்கடி இந்த மையத்தின் மீது விமானம் பறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிளைடர் விமானம் இந்த மையத்தின் மீது வட்டமடித்தது. 

அதில் இருந்து யாரும் மலையில் இறங்கினார்களா? என்பது தெரியவில்லை. கிளைடர் மலையில் வட்டமடிப்பதைப் பார்த்ததும், தொழில் பாதுகாப்புப் படையினரை உஷார் படுத்தியதுடன், அருகில் உள்ள காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தோம். பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்’’ என்றார்கள். ஏற்கெனவே இந்த மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மூன்று அதிகாரிகள் சில மாதங்கள் முன்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில், வளாகத்தின் மீது மர்ம கிளைடர் பறந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close