Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேனியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி!

மிழக அரசியலில் தினம் தினம் பரபரப்பான நிகழ்வுகள் நடந்துகொண்டு இருக்க, மறுபுறம் தமிழக அரசின் சாதனை விளக்கங்களும் நடந்து கொண்டு இருக்கிறது . தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குபட்ட சிலமலை ஊராட்சியில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் ஏராளமாக இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை தேனி மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் துவங்கிவைத்தார்.

தமிழக அரசின் வளர்ச்சித்திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள், சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், அமைச்சர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாக்களின் புகைப்படங்கள், மாவட்டத்தில் நடைபெற்ற முக்கியமான அரசு விழாக்களின் புகைப்படங்கள் என எண்ணற்ற புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சி திறப்புவிழாவுக்கு, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர், போடி வட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close