Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”100 ஆண்டுகள் ஆனாலும் பா.ஜ.க-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது” - புகழேந்தி அதிரடி

”ஜெயலலிதா மூலம் அமைந்த அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ் அணி வாக்களித்தது. அப்படி வாக்களித்த 11 பேர் மீது நோட்டீஸ் தராதது ஏன் ? அவர்களைத் தகுதி நீக்கம் செய்யாதது ஏன் ?” என்று கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி கேள்வியெழுப்பி இருக்கிறார்.


தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரி வந்திருந்த கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, “சபாநாயகருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தவறாக கூறுகின்றனர். உண்மையில் அவருக்கு சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் மட்டுமே இருக்கிறதே தவிர தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை. நாங்கள் ஏற்கெனவே ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளோம். நாங்கள் பேரவைத் தலைவரை மதிக்கிறோம். அதே நேரத்தில் அரசு கொறடா தரும் புகார்களுக்கு எல்லாம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தவறானது. சட்ட வல்லுநர்களிடம் கேட்டு அவர் செயல்பட்டிருக்கலாம். அதிகார வரம்பு தெரியாமல் செயல்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதா மூலம் அமைந்த அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ் அணி வாக்களித்தது. அப்படி வாக்களித்த 11 பேர் மீது நோட்டீஸ் தராதது ஏன்? அவர்களைத் தகுதி நீக்கம் செய்யாதது ஏன்? இதுதொடர்பாக மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நீதிமன்றம் செல்ல இருக்கிறார். தற்போதைய முதல்வர் எடப்பாடி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் எடப்பாடி தினகரனிடம் பேச வேண்டும்.

கட்சிக்கு துரோகம் செய்த ஓபிஎஸ்சை ஏற்க முடியாது. நடிகர் கமலுக்குப் பயந்து செல்போனை ஆஃப் செய்வது, இ-மெயில் முகவரியை மூடுவது போன்ற செயல்களை அமைச்சர்கள் ஏன் செய்கின்றனர். பதவிக்காக முட்டாள் தனமாக செயல்பட வேண்டாம். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள இறங்கிதான் வர வேண்டும். எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பாக நாங்களும் நீதிமன்றத்துக்கு செல்வோம். இந்த பிரச்னையில் பா.ஜ.க எந்த வகையில் செயல்படுகிறது எனத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன கோபம் என்றும் தெரியவில்லை. மோடிக்கும் எங்களுக்கும் என்ன தகராறு? 100 ஆண்டுகள் ஆனாலும் பா.ஜ.க இம்மண்ணில் காலூன்றாது. ரெய்டு, சோதனைகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

நீங்கள் டி.டி.வி-யை கைதுசெய்தாலும், அவர் தனியாக சிறை செல்ல மாட்டார் என்பதை உணர வேண்டும். மேலும் பா.ஜ.க-வுக்கு நாங்கள் எதிரி இல்லை என்பதையும் உணர வேண்டும். ஓபிஎஸ்சை ஒருபோதும் ஏற்க மாட்டோம். முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி கண்டிப்பாக இறங்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் தங்கமணி ஆகியோர்தான் பட்டியலில் இருந்தனர். ஓபிஎஸ் மீண்டும் முதல்வராக சசிகலாதான் காரணம். ஆனால், அவர் முதுகில் குத்திவிட்டார். அதனால் அவரை துணை முதல்வராக ஏற்க மாட்டோம்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close