Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தேர்தல் வர வேண்டுமென்று மக்கள் விருப்பம்!'- திருநாவுக்கரசர் தகவல்

தமிழகத்தில் அரங்கேறி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், 'தமிழகத்தில் தேர்தல் வர வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்' என்று தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணியும் இணைந்தது தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இதனால் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெறுகிறோம்' என்று கூறி சில நாள்களுக்கு முன்னர் ஆளுநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளும், 'அ.தி.மு.க அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். 

இதையொட்டி திருநாவுக்கரசர், 'உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் தோற்றுப்போவோம் என்ற பயம் அ.தி.மு.க-வுக்கு உள்ளது. தமிழகத்தில் தற்போது நடப்பது பா.ஜ.க-வின் பினாமி ஆட்சிதான். தமிழக சட்டமன்றத்தை கூட்டி, அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்' என்று அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close