Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திண்டுக்கல்லில் தினகரன் உருவபொம்மை எரிப்பு!

அ.தி.மு.க திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக இருப்பவர் மருதராஜ். முன்னாள் மேயரான இவர், ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டவர். இந்நிலையில், இவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக தினகரன் நேற்று அறிவித்தார். 

தினகரன் உருவபொம்மை எரிப்பு

இதுவரை திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரே மாவட்டச் செயலாளர் இருந்து வரும் நிலையில், கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரித்து அதற்கு புதிய மாவட்டச் செயலாளர்களை அறிவித்தார் தினகரன். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கதுரையையும், மேற்கு மாவட்டச் செயலாளராக நல்லசாமியையும் தினகரன் அறிவித்தார். 
இந்த அறிவிப்பு ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, விகடன் இணையதளத்துக்கு நேற்று பேட்டியளித்த மருதராஜ், ‘தினகரன் ஒரு செல்லாக்காசு’ என கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், தினகரனின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர், திண்டுக்கல் எம்.ஜி.ஆர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது, தினகரனின் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தார்கள். ‘அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக’ என கோஷமிட்டனர். தினகரனின் உருவ பொம்மையையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரித்தனர். அபிராமி கூட்டுறவு சங்கத்தலைவர் பாரதிமுருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close