Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க எம்.எல்.ஏ-க்களை நாளை சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை சந்திக்கின்றனர்.

வித்யாசாகர் ராவ்


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக பிரிந்தது. இதனிடையே, முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கடந்த திங்கள்கிழமை இணைந்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 


தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். ஏற்கெனவே முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும்கட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.


இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். அவரைச் சந்திப்பதற்காக தி.மு.க மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நேரம் கேட்டிருந்தனர். இந்நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு தி.மு.க எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து, துரைமுருகன் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை வித்யாசாகரை சந்திக்க உள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close