Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டி.டி.வி.தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்' - எம்.பி. அருண்மொழிதேவன் காட்டம்!

"டி.டி.வி.தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்கவேண்டும்" என்று எம்.பி. அருண்மொழிதேவன் கூறியது தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


    

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் நேற்று டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பி.அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்தியா, சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் ஆகியோர் கூட்டாக கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

.
  

அப்போது அவர்கள், "இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் நாங்கள் இருப்போம். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கலைச்செல்வன், தினகரன் அணிக்கு ஒற்றன் வேலை பார்க்க சென்றுள்ளார். கட்சிப் பதவி, ஆட்சிப் பதவி கொடுக்கிறோம் என்று தினகரன் எங்களுக்கு ஆசை வார்த்தை கூறினார். அதற்கு நாங்கள் மயங்கவில்லை. கட்சியிலேயே இல்லாத திவாகரன் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வேடிக்கையாக உள்ளது. தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நன்றாக இருக்கும்" என்றார்கள்.
                            -

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close