Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை சந்திப்போம்' -திருவாரூரில் மு.க.ஸ்டாலின்

"பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆளுநரை சந்திப்போம்" என்று திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்டாலின்

 

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ,  "தமிழக ஆளுநரை பொறுத்தவரை நியாயமாக பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. சட்டமன்றத்தை கூட்டாததால் எம்எல்ஏ -க்களை விலைக்கு வாங்குவதற்கான குதிரை பேரம் நடந்து வருகிறது. திமுக சார்பில் ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். நாளை அல்லது நாளை  மறுநாள் அனுமதி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்கா விவகாரம் நடந்து 40 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் தற்போது உரிமை குழுவைக்கூட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்ட பின்பும், குட்கா விற்கப்படுவதாக கூறி காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், போதிய மருத்துவ வசதிகள் இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு போதிய இடம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதிதான் என்று சொல்லுவார்களா..?" என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close