Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.16 கோடி செம்மரங்கள் சென்னை துறைமுகத்தில் பறிமுதல்!

சென்னை துறைமுகம் வழியாக, மலேசியாவுக்கு கடத்தவிருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரங்களை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

செம்மரம்

 

சென்னை துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவல்களையடுத்து, கடந்த 24 மற்றும் 25-ம் தேதியன்று சோதனை நடத்தினர். அப்போது, மலேசியா நாட்டுக்கு ஆடைகள், புளேர் மேட் போன்ற பொருள்களுடன் மறைத்து வைத்து கடத்த முயன்ற செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.  

நான்கு வெவ்வேறு கண்டெய்னர்களில்  40 மெட்ரிக் டன் அளவுள்ள செம்மரங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 16 ரூபாய் கோடியாகும். சென்னை துறைமுகம் வழியாக கடத்த முயன்ற இந்த செம்மரங்கள் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர், கடப்பா, நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 71 ரூபாய் கோடி மதிப்பிலான 176 மெட்ரிக் டன் செம்மரங்களை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close