Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாலை விபத்து

பாண்டிச்சேரியிலிருந்து திருச்செந்தூருக்கு ஒரு சுற்றுலா வேன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது அந்த வேன் நள்ளிரவில் கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close