Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துரைமுருகன் தலைமையில் ஆளுநரைச் சந்திக்கும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள்!

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்க உள்ளனர். 

துரைமுருகன்

அப்போது, சட்டப்பேரவையை உடனே கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைப்பார்கள் என்று தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் முதலமைச்சரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றன. இந்தநிலையில், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்திக்க இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரைச் சந்திக்க இருக்கும் தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழியும் செல்ல இருக்கிறார். தி.மு.க. உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக ஆளுநர் காலை 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது குட்கா விவகாரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் மீது அவை உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க உள்ளது குறித்தும் புகார் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close