Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’உரிமை குழு பற்றி அழைப்பு வரவில்லை!’ - தகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

குட்கா பிரச்னை குறித்து விசாரிப்பதற்காக நாளை கூட உள்ள உரிமை குழு பற்றி அழைப்பு வரவில்லை என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

stalin
 

கடந்த ஜூலை மாதம் கூடிய சட்டமன்றத்தில் ’தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்கு பொட்டலங்கள் பொதுஇடங்களில் தாராளமாக கிடைக்கின்றன. அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது’ என்னும் குற்றச்சாட்டை தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அவையில் முன்வைத்தனர் . திடீரென குட்கா பொட்டலங்களை அவையில் எடுத்துக் காட்டினர். தி.மு.க. உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், 20 தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார்.  இத்தனை நாளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டிருந்த நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக நாளை அவை உரிமைக்குழு கூடி விவாதிக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்திருக்கிறார். 

இந்நிலையில் திருவாரூரில் திமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண விழாவில் உரையாற்றிய ஸ்டாலின், ’உரிமை குழு கூட உள்ளதை பற்றி இன்னும் அழைப்பு வரவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர் ’அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசுத் தலைவரிடம் முறையிடப்படும். குட்கா பிரச்னை குறித்து நாளை உரிமை குழு கூட உள்ளது. சட்டப்பேரவை உரிமைக்குழு கூடுவது பற்றி எனக்கு அழைப்பு இல்லை. மத்திய அரசிடம் அடிபணியும் அரசாக தமிழக அரசு உள்ளது. இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும், ஒரு மாதத்திற்குள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக வரும்’ என்று பேசினார். குட்கா விவகாரம் நடந்து முடிந்து 40 நாட்களுக்குப் பிறகு எடப்பாடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தி.மு.க. தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது,  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close