Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விநாயகர் சிலை ஊர்வலம்: காவல்துறைக்குக் குவியும் பாராட்டுகள்!

விநாயகர் சிலை ஊர்வலம்

நெல்லை மாவட்டத்தில், விநாயகர் சிலை ஊர்வலத்தை சுமூகமான முறையில் நடத்த மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுவரும் காவல்துறைக்குப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன.

விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த ஏதுவாக, நெல்லை மாவட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 'காவல்துறையின் அனுமதி பெற்றே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். வரும் 30-ம் தேதிக்குள் அனைத்து சிலைகளையும் கரைத்துவிட வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் 20 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ஊர்வலத்தின்போது, பிற மதத்தவர் புண்படும் வகையிலோ, அவர்களை அவமதிக்கும் வகையிலோ கோஷங்களை எழுப்பக்கூடாது என்பது உள்ளிட்ட 16 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதன்படி, நெல்லை மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அமைதியான முறையில் கரைக்கப்பட்டுவருகின்றன. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில், இரவு பகலாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன், கரைப்பதற்கு எடுத்துச்செல்லும் சிலைகளைப் பாதுகாப்பாகவும் அமைதியான முறையிலும் ஊர்வலமாகக் கொண்டுசெல்ல போலீஸார் வழிநடத்துகின்றனர். இதனால், சமூக ஆர்வலர்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமிய அமைப்பினரும் காவல்துறைக்குப் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர். 

பலத்த பாதுகாப்பு

கடையநல்லூரில், விநாயகர் சிலைகள் இன்று பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன. இதுகுறித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கடையநல்லூர் பஜார் கிளையின் தலைவரான குறிச்சி சுலைமான் கூறுகையில், ’’பொதுவாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, ஒருவித பதற்றம் ஏற்படுவது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால், இந்த ஆண்டு போலீஸார் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டதால், கடையநல்லூரில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளன.

மேள தாளத்துடன் நடந்த ஊர்வலத்தின்போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறும் இல்லாமல் காவல்துறையினர் பார்த்துக்கொண்டனர். அத்துடன், இஸ்லாமியர்கள் வசிக்கும் பிரதான சாலையில் உள்ள  நான்கு பள்ளிவாசல்களை விநாயகர் சிலை ஊர்வலம் கடந்துசெல்லும் வரை காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது. அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த உதவிய மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர், உளவுப் பிரிவு காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுமக்கள் சார்பாக பாராட்டுகள்’’ என்றார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close