Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி-யில் தொடரும் அவலம்: மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலைக் கடித்துக் குதறிய நாய்


த்தரப்பிரதேசத்தில், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். நாட்டையே இந்தச் சம்பவம் உலுக்கியது. இந்தச் சூழலில், உ.பி மாநிலம் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குள் நுழைந்த நாய் ஒன்று, இறந்துபோன ஒரு பெண்ணின் உடலைக் கடித்துத் தின்றது. தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களைக் கடித்துத் தின்றுள்ளது.
இறந்துபோன பெண்ணின் பெயர், புஷ்பா திவாரி. ஃபுட் பாய்ஸன் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 26-ம் தேதி இரவு உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்தது.

உபி

மருத்துவமனைக்குள் நுழைந்த நாய் ஒன்று, மார்ச்சுவரிக்குள் சென்று பெண்ணின் உடலைக் கடித்துத் தின்றுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்ச்சியடைந்த புஷ்பா திவாரியின் உறவினர்கள், அலட்சியமாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம்குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close