Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொய்க்கும் தென்மேற்குப் பருவமழை - 6 சதவிகிதம் குறைவு!


ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடக்கும் தென் மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு 6 சதவிகிதம் வரை குறைவாகப் பெய்துள்ளது. இதை, கடந்த ஜூன் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

பருவமழை

ஆகஸ்ட் வரையிலான மழை அளவு கணக்கீட்டின்படி, 5 சதவிகிதமாக இருந்த மழைப்பற்றாக்குறை, தற்போது ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால், கோடை விதைப்புப் பயிர்களான அரிசி, பருத்தி, தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.  

இந்தியாவின் மையத்தில் உள்ள மத்தியப்பிரதேசம், ஹரியானா, வடக்கில் உள்ள உத்தரப்பிரதேசம்,தெற்கில் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழக்கத்தைவிட 20 சதவிகிதம் குறைவான மழை அளவினையே பெற்றுள்ளன. 

தென்மேற்குப் பருவமழை, இந்தியாவின் ஆண்டு மழைப்பொழிவில் 70 சதவிகிதத்தைக் கொடுக்கிறது. இந்தக் குறைபாடு, இந்திய விவசாயத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது, வரப்போகும் நாள்களில் மழையின் அளவு கூடும்பட்சத்தில், இந்த கணிப்பு மாறலாம் என்றும் வானிலை மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close