Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'திமுக செய்தது மாபெரும் தவறு'- குட்கா விவகாரத்தில் கொந்தளிக்கும் பொள்ளாச்சி ஜெயராமன்

பொது இடங்களில் குட்கா பொருள்கள் தாராளமாகக் கிடைக்கிறது என்பதை  சிம்பாளிக்காக உணர்த்தும் வகையில், எதிர்க்கட்சியான தி.மு.க-வினர் சட்டசபையில் கடந்த ஜூலை 18-ம் தேதி காட்டினார். இது தொடர்பாக, அப்போதே அவை உரிமைக்குழுவின் விசாரணைக்கு சபாநாயகர் தனபால் சிபாரிசு செய்தார். அந்த விசாரணையை தற்போது கையில் எடுத்துள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு.

குட்கா


இந்நிலையில், இன்று அந்த சட்டமன்ற உரிமைக் குழு கூடுகிறது. அப்போது குட்காவை, சட்டசபையில் யார் யார் காட்டினார்கள் என்பதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்களைப் பரிசீலனை செய்ய உள்ளனர். பரிசீலனை முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர். இதன் அடுத்தக்கட்டமாக அனைவர் மீதும் ஆறு மாத சஸ்பெண்ட் அல்லது வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று சட்டமன்ற அதிகாரிகள் தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்.

இது தொடர்பாக, சட்டமன்ற உரிமைக் குழுத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை நேரில் சந்தித்தோம். அவரிடம் சில கேள்விகள்...

பொள்ளாச்சி ஜெயரமான்


இந்தப் பிரச்னையை 40 நாள்களுக்குப் பிறகு சட்டசபையில் கிளப்பப்பட்டிருப்பதற்கு, அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

"ஏற்கெனவே சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூச்சல், ரகளை செய்த விவகாரம் மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் முறைப்படி பரிசீலனை செய்தோம். அதன்பிறகு, அவர்கள் மன்னிப்புக் கேட்டதால், அவர்களை சபாநாயகர் மன்னித்தார். அப்படியிருக்கையில் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை."

சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்க்கட்சியினர், சட்டசபையில் சுட்டிக்காட்ட உரிமை உண்டு... அந்த வகையில் குட்கா தாராளமாக கிடைக்கிறது என்பதை சட்டசபையில் சுட்டிக்காட்டியதில் என்ன தவறு இருக்க முடியும்?

"கள்ளச்சாராயம் தடை செய்யப்பட்டுள்ளது. அதை எங்கேயாவது காய்ச்சுகிறார்கள் என்பதற்காக, அதை சட்டசபையிலேயே கொண்டு வந்து காட்டலாமா? குட்கா புகை வஸ்துகளைத் தமிழகத்தில் எங்கேயாவது வாங்கியிருந்தால், அதன் ஆதாரத்தைதான் சட்டசபையில் காட்டியிருக்க வேண்டும். அந்தப் பொருளையே காட்டக்கூடாது. அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல் வெளியே நிகழும்போது, அந்த நிகழ்வை சட்டசபைக்குள் செய்துகாட்டக்கூடாது என்பது விதி. இதை எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளாததால்தான், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்".

- கனிஷ்கா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close