Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிமானிட்டைசேஷன் நடவடிக்கையால் சிக்கப்போகும் 17 ஆயிரம் நிறுவனங்கள்!

அரசின் அதிரடி நடவடிக்கையான டிமானிட்டைசேஷனுக்குப் பிறகு, முறைகேடாகப் பணத்தைக் கையாண்டிருப்பதாக 17 ஆயிரம் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிமானிட்டைசேஷன்

கடந்த வருடம் நவம்பர் மாதம், டிமானிட்டைசேஷன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை, இந்த நடவடிக்கையால் எந்தக் கறுப்புப் பணமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், டிமானிட்டைசேஷனுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கணக்கெடுக்கப்பட்டு வந்ததில், முறைகேடாகப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 17 ஆயிரம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இவற்றில், சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களும் உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close