Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வீட்டுக்குப் போங்க; உங்க பிரச்னையைத் தீர்ப்பேன்' - மூதாட்டியை நெகிழவைத்த கலெக்டர்!

கலெக்டர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனுக்களாகக் கொடுத்தனர் . மனுவைப் பார்த்தபின், குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் என்ன பிரச்னை, என்ன காரணம் எனக்கேட்டு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார். திடீரென்று மூதாட்டி ஒருவர் வந்து தனது பிரச்னைகளைப் புலம்பித்தள்ளினார். அவர், பல மாதங்களாக ஏதாவது பிரச்னைகள் எனக் கூறி, அடிக்கடி கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த மூதாட்டியின் குறையைக் கேட்டபின், 'வரும் 4-ம் தேதிக்குள் உங்கள் குறைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்; கவலைப்பட வேண்டாம்' என கலெக்டர் தெரிவித்தார். மேலும், நீங்கள் கஷ்டப்பட்டு இங்கு வர வேண்டாம்; தாசில்தாரையே உங்கள் வீட்டுக்கு வரச் சொல்கிறேன் எனக்கூறி, அவருக்கு உணவு வழங்கி போலீஸ் பாதுகாப்புடன் வழி அனுப்பிவைத்தார் .

கலெக்டர்

வெளியே வந்த மூதாட்டியிடம் பேசினோம். ''என் பெயர் லெட்சுமி. மதுரை புதூர் பக்கத்தில் வசித்துவருகிறேன். எனது வீட்டை சிலர் ஏமாற்றிவிட்டனர். அதற்குப் பின், நான் அநாதை ஆக்கப்பட்டேன். எனக்கு கலெக்டர் கருணை அடிப்படையில் அரசுப் பரிந்துரையில் உதவிசெய்தார். அதற்கான பணம், மாதாமாதம் சரியாக வந்துகொண்டிருந்தது. தற்போது, இரண்டு மாதமாக வரவில்லை. அதனால்தான் இன்று கலெக்டரைப் பார்க்க வந்தேன். அதைச் சரிசெய்து தருகிறேன்; அதிகாரிகளை என் வீட்டுக்கு வரச் சொல்கிறேன் என்று ஆதரவாகக் கூறியுள்ளார். கலெக்டர் உதவி செய்வார் என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார். அந்த மூதாட்டியின் கடுகடுப்பான பேச்சுக்கு பொறுமையாகப் பதில் சொன்ன மாவட்ட ஆட்சியரைப் பார்த்து பொதுமக்கள் நெகிழ்ந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close