Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரமாணப் பத்திரங்கள் வாபஸ்... டெல்லிக்குப் பறக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை டெல்லி பயணம் செல்கின்றனர். இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் தாக்க செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுவதற்காக, இருவரும் டெல்லி செல்கின்றனர். அ.தி.மு.க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில், அ.தி.மு.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெறுவதற்காக, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எ.ம்.பி-க்களிடம் கையெழுத்து வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெற உள்ளதையும், தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் இன்று மாலை டெல்லி பயணம் செல்கின்றனர். மைத்ரேயன் எம்.பி. மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்.

இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close