Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவைப் பதற வைத்த நபர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பென்னிகுவிக் அரங்கத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடப்பது வழக்கம். இன்று பொதுமக்களிடம் குறைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மனுவாகப் பெற்று அதிகாரிகளிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது, மனுவைக் கொடுத்துவிட்டு சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சார்ந்த மகாராஜா என்பவர் பூச்சி மருந்தைக் குடிக்க முயன்றார்.

madurai
 

கலெக்டர் முன்பு பூச்சி மருந்து குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மகாராஜாவிடம் பேசினோம். "வாடிப்பட்டி தாலுகா தாதம்பட்டி கிராமத்தில் 19 ஏக்கரில் நீர்ப்பிடிப்பு கண்மாய் ஒன்று உள்ளது. இந்தக் கண்மாயைச் சுற்றி பாரம்பர்யமான மரங்களும் உள்ளன. இங்கு பல பறவைகளும் நீர் வாழ் உயிரினங்களும் வாழ்கின்றது. மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீரையும் தாங்கிப்பிடிக்கின்றது.

இந்நிலையில், சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு வரும் நிலையில் அக்கண்மாயில் அரசு ஆக்கிரமித்து நீதிமன்றத்தைக் கட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதைத் தடுக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதை மீட்டு, அதில் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கட்ட வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்தோம். பலமுறை மனு அளித்தும் எந்தப் பயனுமில்லை. எனவே, எனது உயிர் போனாலும் பரவாயில்லை. அந்தக் கண்மாயைப் பாதுகாக்க வேண்டும் எனப் பூச்சி மருந்து குடிக்க முயன்றேன். என்னை அதிகாரிகள் தடுத்தனர். பின் அந்த பிரச்னையைப் பற்றி விசாரிக்கிறேன் என்று கலெக்டர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தற்போது இருக்கும் ஆட்சியர்தான் செல்லூர் கண்மாய், முடக்காத்தான் கண்மாய் உள்ளிட்டவற்றைத் தூர்வாரி பாதுகாக்க முயற்சியெடுத்தார். இந்நிலையில், வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாயைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டால் அக்கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close