Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவ கலந்தாய்வில் மோசடி: முதலிடம் பிடித்த மாணவருக்கு சம்மன்!

நீட் அடிப்படையிலான மருத்துவக் கலந்தாய்வு தமிழகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கியது. மாநிலங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள, அந்தந்த மாநிலத்தில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதனிடையே, தமிழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வில் கலந்துகொள்ள, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மருத்துவ கலந்தாய்வு


இதுதொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையரிடம் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நடந்து வரும் கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பதை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இதையடுத்து, அந்த மாணவர்களை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்களில், சுலைமான் என்ற மாணவர்தான் தமிழக அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, அந்த மாணவர்களின் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவர்களுக்குப் போலிச் சான்றிதழ் வழங்கிய வி.ஏ.ஓ, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close