Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரம்... தமிழக அரசு உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு

வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 

சென்னை உயர்நீதிமன்றம்


அனைத்து வாகன ஓட்டிகளும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி புத்தகம் மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முறையிட்டார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். ஆனால், இதுதொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு பட்டியல் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close