Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

4 ஆண்டுகளாக பட்டாவுக்குப் போராட்டம்! ஆட்சியர் அலுவலகத்தை அதிர வைத்த பெண்

’யாரும் கலெக்டரிடம் மனு கொடுக்காதீர்கள். சீட்டை தேய்த்துக்கொண்டுதான் போகிறார்களே தவிர மக்களுக்கு நன்மை செய்யமாட்டார்கள்’ என்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

                 

அரியலூர் மாவட்டம் கோமன் கிராமத்தைச் சேர்ந்தவர் கலா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2010-ம் ஆண்டு இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட ஆட்சியரகத்தில் பல முறை மனு அளித்ததையடுத்து   கடந்த 2014 ஆண்டு வீட்டுமனை வழங்க அரசு உத்தரவிட்டது.

                      

இந்நிலையில், அரசு வழங்கிய இலவச இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி நான்கு ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கலா திடீரென்று  தீக்குளிக்க முயற்சித்தார்.

பின்பு காவலர்கள் மடக்கிப் பிடித்தார்கள். பின்பு அவர் கொண்டுவந்த பத்திரங்கள். குழந்தைகளின் சான்றிதழ்கள். ரேசன் கார்டு உள்ளிட்ட இதுவரை வழங்கிய மனு காப்பிகள், அரசு வழங்கிய ஆவணங்களை வீசி எறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யாரும் மனுக்கொடுக்காதீர்கள். இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.

                

இவர்கள் சீட்டை தேய்த்துக்கொண்டு சம்பளத்தை வாங்குவதற்காக மட்டுமே வேலைக்கு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகமே சும்மா. பட்டா வாங்குவதற்காகவே என்னுடைய வாழ்க்கையை அழித்துவிட்டேன் என அருகில் இருந்தவர்களிடம் கண்ணீருடன் கூறினார். மேலும், கலாவால் வீசியெறியப்பட்டதில் காற்றில் பறந்த ஆவணங்களைப் பொதுமக்கள் எடுத்து அவரிடம் கொடுத்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close