Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயத்தைக் காப்பாற்றிய கண்மாய் தரிசு நிலமான அவலம்!

புதுக்கோட்டையில் விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாமல் குளம், ஏரி, கண்மாய் எல்லாம் வறண்டு காட்சியளிக்கின்றன.

புதுகோட்டை
 

கவிநாடு கண்மாய் ஒரு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறத்துக்கும் நீர் ஆதாரமாகத் திகழ்ந்தது. மற்ற மாவட்டங்கள்போல புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஆற்றுப்பாசனம் வேண்டாம் என்று சொன்ன காரணம்கூட இக்கண்மாய் உள்ளதால்தான். ஏனெனில், மழைபெய்து கண்மாய் நிரம்பி வழிந்தால் 3 ஆண்டுக்குப் பஞ்சமே இருக்காது என்று முன்னோர்கள் கூறுவர். அதுதான் உண்மையும்கூட.

இந்தக் கண்மாயின் நீளம் மற்றும் அகலம் இன்றளவும் எவரும் அளக்கவில்லை. எவரும் அறியவில்லை. இக்கண்மாயைக் "காக்கா குறுக்க பறக்காத குளம்" என்று குறிப்பிடுவார்கள். கண்மாய் குறுக்கே காக்காவும் பறக்காது. அதாவது காக்கா குறுக்கே பறக்க முடியாத அளவுக்கு நீண்ட கண்மாயாம்!

இவ்வளவு நீண்ட கண்மாய் இருக்கும்போது ஆத்து பாசனம் எதற்கு... ஆனால், இப்போது கண்மாயில் அரசாங்கத்தின் அனுமதியோடு மணல் எடுக்கின்றனர். ஒரு காலத்தில் சுற்றுவட்டார பகுதிக்கே தண்ணீர் கொடுத்த கண்மாய் தற்போது வறண்ட தரிசு நிலமாக உள்ளது. அப்பகுதியில் மணல் எடுக்கின்றனர். பாதி வியாபாரம் ஆகிவிட்டது. அந்த இடத்தில் இன்னும் கொஞ்ச காலத்தில் வியந்து பார்க்கும் அளவுக்கு பெரிய கட்டடம் வருவதற்கும் ஆச்சர்யமில்லை. இந்த அவல நிலை கவிநாடு கண்மாய்க்கு மட்டுமல்ல... இதுபோன்று எண்ணற்ற கண்மாய்களின் நிலையும் இதுவே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close