Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் தவறி விழுந்தவர் மீட்பு

பாம்பன் பாலத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து குடிபோதையில் கடலில் தவறி விழுந்தவரை மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மண்டபம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (51). இவர் இன்று பகலில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரும் பயணிகள் ரயிலில் வந்துள்ளார். இந்த ரயில் பாம்பன் பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வந்து கொண்டிருந்த முனீஸ்வரன் திடீரென தவறி கடலில் விழுந்தார். இதைக் கண்ட சக பயணிகள் பதற்றமடைந்தனர்.  பாலத்தில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களும் உடனடியாக அப்பகுதியில் இருந்த மீனவர்கள்  உதவியுடன் கடலில் விழுந்த முனீஸ்வரனை மீட்டனர்.

பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலில் இருந்து கடலில் விழுந்தவர்
 

மீட்கப்பட்ட முனீஸ்வரனை ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்தும் டிராலியின் மூலம் கரைக்குக் கொண்டுவந்த அவர்கள் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கடலில் விழுந்த முனீஸ்வரன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் போதை மயக்கத்தில் விழுந்தாரா அல்லாது தற்கொலை செய்துகொள்ள முயன்றாரா என்பது குறித்து பாம்பன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close