Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேபிள் டிவி சங்கக் கூட்டமைப்பு உண்ணாவிரதம்

கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய மாநில அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் இன்று மதுரையில் நடந்தது.

''25 வருடங்களாக கஷ்டபட்டு பல இன்னல்களைச் சந்தித்து உருவாக்கிய கேபிள் தொழிலையும், எங்களுடைய வாடிக்கையாளர்களையும், உபகரணங்களையும் தங்களது என்று கூறுவதை அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுத்திக்கொள்ள வேண்டும், டிராய் நிர்ணயித்த மாதந்திர கட்டணத்தை ஆபரேட்டர்களே மக்களிடம் நேரடியாக வசூலிக்க கேபிள் கார்ப்பரேஷன் அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வசூலிக்கும் முறையை ரத்துசெய்து, வசூலிக்கும் உரிமையை ஆபரேட்டர்களிடம் வழங்க வேண்டும்,

கேபிள்டிவி

தரை வழியில் ஆப்டிகல் பைபர் கேபிளைக் கொண்டு செல்ல மத்திய அரசின் அறிவிப்பின்படி குறைந்த கட்டணத்தை விதிக்க வேண்டும். கேபிள் ஆபரேட்டர்களிடம் மரியாதைக் குறைவாகவும், சட்ட விரோதமாக செயல்படும் மாவட்ட அளவிலான கேபிள் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள் ஆபரேட்டர்களுக்காக நல வாரியம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களுக்குப் போட்டியாக புதிய ஆபரேட்டர்களை அதிகாரிகளே உருவாக்கி வருகிறார்கள். அவர்களை தடுக்க வேண்டும்' என்பது போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close