Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவி வளர்மதி மீதான வழக்கு..! செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வளர்மதி  advisory board முன்பு ஆஜர் ஆனார். அப்போது நடந்த விசாரணையில்  வளர்மதி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது செல்லும் என advisory board கூறி இருக்கிறது.

வளர்மதி

வளர்மதி மீதான வழக்கின் விசாரணை 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, வளர்மதி மீதான குண்டர் சட்டம் செல்லும் என advisory board தெரிவித்திருப்பதாக கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேரணிக்கு வருமாறு, சேலம் மகளிர் கல்லூரி முன்பாக வளர்மதி துண்டுபிரசுரம் கொடுத்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று உத்தரவிடக் கோரி, வளர்மதியின் தந்தை மாத்தையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 14-ம் தேதி மனுத்தாக்கல் செய்வதாக போலீஸார் கூறினர். ஆனால், அன்றைக்கும் அவர்கள் பதில் மனுதாக்கல் செய்யவில்லை. மீண்டும் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் ஒரு வாரகாலம் அவகாசம் அளிக்கும்படி போலீஸார் கேட்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close