Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி மாவட்டத்தில் 16 இடங்களில் அகழாய்வு செய்ய த.மு.எ.ச.வினர் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் 16 இடங்களில் அகழாய்வு நடத்த வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளிக்கப்பட்டது.

அகழாய்வு நடத்திட மனு அளித்த த.மு.எ.ச.வினர்

இதுகுறித்து பேசிய த.மு.எ.ச.வின் தூத்துக்குடி மாவட்டக்குழு செயலாளர் ஆனந்தன், ‘’மிகவும் தொன்மையான நாகரிகம் ஆதிச்சநல்லூர் நாகரிகம். இந்தியாவில் முதலில் அகழாய்வு செய்யப்பட்டது ஆதிச்சநல்லூரில்தான். இதற்குப் பிறகே சிந்துசமவெளி பகுதி மற்றும்  அரிக்கமேடு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டன. ‘உலக நாகரிகத்தின் தொட்டில்’ என ஆதிச்சநல்லூர் அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த 2004, பிப்ரவரியில் நடந்த அகழாய்வில் 115 ஏக்கர் பரப்பளவுள்ள தொன்மையான இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்த முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதியில் இதுவரை 4 கட்டமாக அகழாய்வு நடந்துள்ளது. ஆனால், இந்த ஆய்வுகள் குறித்து இதுவரை அறிக்கை ஏதும் தொல்லியல்துறை வெளியிடவில்லை. இந்த அறிக்கையை விரைவில் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து ஆகழ்வாராய்ச்சி நடத்தப்படவேண்டும். 

முதுமக்கள் தாழி

அதோடு ஆதிச்சநல்லூரின் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களான அகரம், வல்லநாடு, வடக்கு வல்லநாடு, முறப்பநாடு, வசவப்பபுரம், கருங்குளம், விட்டிலாபுரம், கொங்கராயக்குறிச்சி, திருவைகுண்டம், திருப்புளியங்குடி, புதுக்குடி,  வெள்ளூர், கால்வாய், அப்பன்கோவில், மாறமங்கலம் ஆகியவற்றிலும், கடம்பூர் – நாரைக்கிணறு சாலையில் உள்ள உபமின்நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் ஆதிச்சநல்லூர் போன்றே முதுமக்கள் தாழிகள் பல காணக் கிடைக்கின்றன. இந்த பகுதியிலும் என மொத்தம் 16 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close