Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காரைக்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி!


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வந்தார். கடந்த மாதம்  விடுமுறையில் ஊர் திரும்பினார். இவர் குடியிருக்கும் பர்மா காலனியைச் சுற்றி, கடந்த ஆறு மாத காலமாக டெங்கு காய்ச்சல் பரவிக்கொண்டிருந்தது. அதில், இவருக்கும் 18-ம் தேதி காய்ச்சல் வந்தது. காரைக்குடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், காய்ச்சல் வேகமாகப் பரவி மூளையைப் பாதித்தது.

உடனே , மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் முருகேசன். டெங்கு காய்ச்சல் உச்சகட்டத்தை அடைந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், அதிகாரிகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக அறிக்கை கொடுக்க மறுத்துவிட்டார்கள். இறந்து போனவர், காரைக்குடியில் உள்ள மக்கள் மன்றப் பொறுப்பாளர் என்பதால், இந்த மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரான ராஜ்குமார் போராடிய பிறகு, அதிகாரிகள் ஒருவழியாக ஆய்வக அறிக்கையில் டெங்கு என வழங்கியிருக்கிறார்கள். இந்த மாவட்டம் முழுவதும் டெங்கு மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து நிர்வாகம் அவரவர் பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தாமல் அலட்சியம் காட்டுவதே, டெங்கு காய்ச்சல் பரவக் காரணம் என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close