Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காட்டில் கிடந்த குழந்தை - மீட்டெடுத்த திருப்பூர் மக்கள்..!

பிறந்து ஒரு மணி நேரமேயான பச்சிளம் குழந்தையை, காட்டுப் பகுதியில் இருந்து பொதுமக்கள் மீட்டெடுத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துகொண்டு இருந்த அதிகாலை நேரம், சின்னாண்டிபாளையம் என்னும் ஊரில் உள்ள காட்டுப்பகுதியின் வழியே சென்றுகொண்டு இருந்த பொதுமக்கள் சிலரின் காதுகளில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகைச் சத்தம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட சிலர், அந்தச் சாலையில் இருந்து விலகி, குழந்தையின் சத்தம் கேட்ட காட்டுப் பகுதியின் திசை நோக்கிச் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது அங்கே பச்சிளம் பெண் குழந்தையொன்று மழையில் நனைந்த நிலையில், குளிரில் நடுங்கியபடி, செடிகளுக்கு நடுவே கிடத்தப்பட்டவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்.

தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்காக குழந்தைப் போராடிக்கொண்டு இருந்த தகவலைக் கேட்டு அப்பகுதி மக்கள் பலரும் சம்பவ இடத்தில் கூடிவிட்டார்கள். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பிறந்து ஒரு மணிநேரம்கூட ஆகாத நிலையில், அந்தப் பச்சிளம் பெண் குழந்தையைக் காட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்ற அக்குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் திருப்பூர் மத்திய காவல் நிலைய அதிகாரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close