Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விளையாட்டு தினத்தில் விழிப்புஉணர்வு பேரணி!

ஹாக்கி உலகின் ஜாம்பவான் தயான்சந்த் பிறந்த தினம் இன்று. இந்தியாவில் தேசிய விளையாட்டாக ஹாக்கி மாறியதற்கும் சர்வதேச அரங்கில் ஒலிம்பிக்கில் இந்தியா மூன்று பதக்கங்களை வெல்வதற்கும் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தயான்சந்த். மாயாஜால ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஹாக்கி ரசிகர்களைத் தன்வசப்படுத்திய தயான்சந்தைப் பெருமிதப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான இன்று, தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய விளையாட்டு தினம் பேரணி

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல் பகுதியில் சிவகங்கை நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பில் தேசிய விளையாட்டு தினப் பேரணி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் சார்பில் மாணவர்களும் உடற்கல்வி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். சுமார் 1,500 பேர் கலந்துகொண்ட இந்தப் பேரணி சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தொடங்கி முக்கிய வீதிகளைக் கடந்து மீண்டும் அரண்மனை வாசலில் முடிவுபெற்றது. இந்தப் பேரணியை சிவகங்கை ஆர்.டி.ஓ சுந்தரமூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தற்போதைய நிலையில் இந்திய ஹாக்கி அணி சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும் முழுமையான முக்கியத்துவம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய விளையாட்டில் நம் பங்கை உலக அரங்கில் முன்னிறுத்தி செல்வதே தயான்சந்துக்கு நாம் செய்யும் கைம்மாறு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close