Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷப்பூச்சிகளை விரட்டும், தோல் அலர்ஜி போக்கும்... அதிசயக் கிழங்கு ஆகாய கருடன்!

கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் கழுகு போன்ற உருவம் கொண்ட ஒரு பொருள் கட்டித் தொங்கவிடப்படும். அதன் பெயர் ஆகாய கருடன் கிழங்கு. காடுகளில் வளரும் இந்தக் கிழங்கு பற்றிய அபூர்வ தகவல்கள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொல்லன் கோவை, பேய்சீந்தல் போன்ற பெயர்கள் இதற்கு இருந்தாலும் ஆகாய கருடன் கிழங்கு என்பதே பொதுப்பெயர்.

இயற்கை கிருமி நாசினி :

காட்டில் மட்டுமே வளரும் கொடி வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர் பகுதியை எடுத்துவந்து வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவது வழக்கமாக இருக்கிறது. நாம் இப்போது கற்றாழையைத் தொங்கவிடுவது போல, அந்தக் காலத்தில் இந்தக் கிழங்கைத்தான் தொங்கவிடுவர். கயிற்றில் தொங்கும்போது அது கருடன் வடிவில் இருப்பதால் இந்தக் கிழங்கிற்கு இப்பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், வானத்தில் இருக்கும் கழுகு நிலத்தில் ஊர்ந்துசெல்லும் பாம்பை வேட்டையாடுவது போல, இந்தக் கிழங்கு பாம்புகளை விரட்டும் சக்தி கொண்டது. அதற்குக் காரணம் இந்தக் கிழங்கின் வாசம். இந்த வாசத்தால் எந்த விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது. அதுமட்டுமல்லாமல், இயற்கை கிருமி நாசினியாகவும் செயல்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித தொற்று நோய்களும் வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

ஆகாய கருடன்

அமானுஷ்ய சக்தி கொண்டது :

விஷப்பூச்சிகளை விரட்டுவது போல, வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்கள், பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்குவது மட்டுமல்லாமல், தீய சக்திகளை தனக்குள் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் இந்தக் கிழங்கிற்கு உண்டு என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கோவில் கோபுர கலசம், பிரபஞ்சத்தில் இருக்கும் பாசிட்டிவ் சக்திகளை ஈர்த்து கோவில் கருவறைக்கு அனுப்புவது போல, இந்த ஆகாய கருடன் கிழங்கும் பாசிட்டிவ் சக்திகளை ஈர்த்து வீட்டிற்கு கொடுக்கும் வல்லமை படைத்தது என்றும் சொல்லப்படுகிறது.

மூலிகை குணம் கொண்டது :

பாம்பு கடித்தால், இந்த ஆகாய கருடன் கிழங்கை சிறிதளவு எடுத்து வெறும் வாயில் போட்டு மெல்ல வேண்டும். சிறு நேரத்தில் வாந்தி உண்டாகும். அதைத் தொடர்ந்து உடலில் இருக்கும் விஷம், மலம் வழியாக முழுவதுமாக இறங்கிவிடும் என்கிறார்கள் நாட்டுப்புற மருத்துவர்கள். இதேபோல், மண்ணுளிப்பாம்பினால் ஏற்படும் தோல் அலர்ஜியை போக்கும் அருமருந்தாகவும் இந்தக் கிழங்கு செயல்படுகிறது. கிழங்கை வெயிலில் காயவைத்து அரைத்துப் பொடி செய்துவைத்துக்கொண்டு, தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை வாயில் போட்டி சுடுதண்ணீர் குடித்துவந்தால், எல்லாவித தோல் நோயும் குணமாகும். இதன் இலையை நறுக்கி வைத்துக்கொண்டு சூடான சட்டியில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு நறுக்கிய இலையை அதில் போட்டு நன்கு வதக்கிய பின்னர், வெள்ளைத் துணியில் கட்டி, வலி எடுத்த கை, கால்களுக்கும், வீக்கத்திற்கும் ஒத்தடம் கொடுத்தால் வலி, வீக்கம் நீங்கும். மூட்டுவலி விரைவில் குணமாகும்.

கிழங்கு

கிலோ 120 ரூபாய்:

அந்தக் காலத்தில் காடுகளில் வளரும் இந்த அதிசய கிழங்கை எடுத்துவந்து சந்தைகளில் விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கால மாற்றத்தால் இந்தக் கிழங்கைப் பற்றிய விழிப்புஉணர்வு இல்லாமல் போனதால் அதன் தேவை குறைந்தது. இப்போது ஆகாய கருடன் கிழங்கை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் தேனி மாவட்டம் உழவர் சந்தையில் ஆகாய கருடன் கிழங்கு, கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விற்பனைக்கு வைக்கப்பட்ட கிழங்கின் மகத்துவம் அறிந்த வயதானவர்கள் உடனே வாங்கிச்சென்றுவிட்டனர். சந்தைக்கு வந்திறங்கிய அரை மணி நேரத்தில் ஒரு மூட்டை கிழங்கும் விற்பனையாகிவிட்டது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close