Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

49 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ-க்கள்! அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடக்கும்? #HallOfShameADMK

 

                                           பொதுக்குழு இவர்களைச் சுற்றித்தான்

.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த, எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 49 எம்.எல்.ஏ-க்கள் கணக்கில் வரவில்லை என்கிறார்கள்.  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வெற்றிவேல் சொல்வது போல், அவர்கள் 'ஸ்லீப்பர்செல்' எம்.எல்.ஏ-க்களா என்ற பரபரப்பு எதிரணி முகாமில் பற்றிக் கொண்டிருக்கிறது. அது பொதுக்குழுவில் வலுவாக எதிரொலிக்கலாம் என்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 234  சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.  அதில்,  அ. தி.மு.க. 135, தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 மற்றும் காலி இடம் 1 (ஜெ.ஜெயலலிதா  இறப்பு காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி) என்றளவில் கட்சிகளின் பலம் உள்ளது. அ.தி.மு.க அணிகளின் பலம் முந்தைய கணக்குப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 116, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 10, டி.டி.வி. தினகரன் அணிக்கு  9 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள்  கணக்கு வருகிறது. அ.தி.மு.க அணிகளின் நேற்றைய கணக்கு (ஆகஸ்ட் 28, 2017)படி,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து 113 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். டி.டி.வி. தினகரன் அணியில் 22 ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அ.தி.மு.க அணிகளின்  இன்றைய கணக்கு (ஆகஸ்ட் 29, 2017) படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். அணிகள் இணைந்து மொத்தம் இருப்பது 64 எம்.எல்.ஏ-க்கள்தான். பழைய கணக்குப்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு அதே 22  எம்.எல்.ஏ-க்கள், ஆதரவு அணியில் உள்ளனர். ஆக யாருன்னே தெரியாத அணியாக  49 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 

ADMK


 அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,757, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 250,  அ.தி.மு.க-வில்  உள்ள அரசியல் மாவட்டம்  50. கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. மூன்றாண்டுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள்தான், கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்கிறார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய செயலாளர்கள்தான் பொதுக்குழு உறுப்பினர்களாக வருகிறார்கள். கட்சியில் இருக்கும் பல்வேறு அணிகளின் (உதாரணம்: விவசாய அணி, வழக்கறிஞர் அணி) மாநிலச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக்கு நெருக்கமானவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் வந்து விடுவார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள்தான் கட்சியின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள். இதற்கான தேர்தல் நடக்கும்போது, பொதுக்குழு உறுப்பினர் உடல்நலமில்லாமல் இருந்தால், நேரில் போய் கையெழுத்து வாங்கப்படும். மற்றவர்கள் பொதுக்குழுவில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் (இது ஏட்டில் இருப்பது. பெரும்பாலும் நடைமுறை என்னவென்றால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல, அனைத்து உறுப்பினர்களிடமும் 15 நாள்களுக்கு முன்னரே கையெழுத்து வாங்கப்பட்டுவிடும். அதன் பின்புதான் பொதுக்குழு கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அங்கே சம்பிரதாயத்துக்காக வாக்கெடுப்போ... அல்லது ஒருமனதாகவோ தேர்ந்தெடுப்பார்கள்).கடந்த 28.8.2017 -ம் தேதியன்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.  முதல்வர், துணை முதல்வர் பங்கேற்ற அந்தக் கூட்டத்துக்கு. வருகை தந்த எம்.எல்.ஏ-க்கள் 64 பேர் மட்டுமே. எம்.எல்.ஏ-க்கள் வருகை குறித்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் மற்றும் மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எண்ணிக்கை குறித்து  அவர்கள் மறுக்கவும் இல்லை, எதிர்க்கருத்தும் சொல்லவில்லை... 'பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்' என்று மட்டும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 49. ஆக, இவர்கள் எந்த அணியையும் சாராதவர்கள். அணி சாராத 49 எம்.எல்.ஏ-க்களை தங்கள் அணியினர் என்று டி.டி.வி. தினகரன் தரப்பு உரிமை கொண்டாட வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் ஏற்கெனவே தினகரனிடம் உள்ள 22 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து 71 எம்.எல்.ஏ-க்கள், டி.டி.வி. தினகரன் கைவசம் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.


டி.டி.வி. தினகரன் : 71, ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இணைந்து : 64 ஆக மொத்தம் 135. இந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது தினகரனிடம்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். கட்சியின் பொதுக்குழு, தலைமைச் செயற்குழு  உறுப்பினர்களுக்கான அதிகாரமும், பொதுச் செயலாளர் தேர்வு முறையும் எப்படி நடக்கிறது தெரியுமா?   “இவர்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று ஒரு நபரை முன்னரே தேர்வுசெய்து முடித்துவிட்டு, அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் போட்ட தீர்மானத்தின் மீது பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிதல், முன் மொழிதல், ஆதரித்தல் என்ற நிலையிலிருந்து கொஞ்சமும் விலகாமல் ஒட்டு மொத்தமாக ஆதரவு என்று கையெழுத்து போடுவார்கள். ஒருவருக்கு மேற்பட்டவர் முன்மொழியப்பட்டால், தேர்தல் நடக்கும்.  தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எப்போதும், தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்களாகவே இருப்பார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர, பொதுக்குழு நடவடிக்கையைப் பார்வையிட சிறப்பு அழைப்பாளர்களாக 25 பேருக்கு அழைப்பு இருக்கும். சசிகலா, இளவரசி போன்றோர் அ.தி.மு.க.வில் முன்பு நடைபெற்ற பொதுக்குழுக்களில் இப்படி சிறப்பு அழைப்பாளர்களாக  அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அமர்ந்திருப்பார்கள். முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்கும் பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது... இப்போதைய கணக்குப்படி,  ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகியோர் கூட்டிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காத 49 பேர் யார் என்ற கேள்வி ஒருபுறம் நிற்கிறது. இன்னொரு புறம் அவர்கள் அனைவரும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வெற்றிவேல் சொல்வதுபோல் 'ஸ்லீப்பர்செல்' எம்.எல்.ஏ-க்களாக இருந்தால்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்  எகிறிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தமாகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close