Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பிரச்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்!

எட்வினா

பிறந்து 35 நாள்களே ஆன பெண் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்காக, கணவன் தன் காதல் மனைவியைக் கொலை செய்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை அடுத்துள்ள போத்தனூர் பகுதியைச் சேர்ந்த, முரளியும் எட்வினா என்கிற வாமனதேவியும் (24) காதல் தம்பதி. இந்து மதத்தைச் சேர்ந்த முரளியும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த எட்வினாவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கடந்த 35 நாள்களுக்கு முன்பு இந்தத் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரியா என்ற பெயரை எட்வினா சூட்டியுள்ளார். ஆனால், இந்து முறைப்படிதான் பெயர் வைக்க வேண்டும் என்று முரளி வாக்குவாதம் செய்துள்ளார். இந்தப் பிரச்னை காதல் தம்பதிக்குள் பெரும் புயலைக் கிளப்பியது. கடந்த ஒரு வாரமாகவே இருவருக்குள்ளும் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் சண்டையும் சச்சரவுமாகவே இருந்திருக்கிறது  

இந்நிலையில், நேற்றிரவு முரளி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். குடி போதையில் இருந்த அவர், குழந்தைக்கு இந்துப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று பேச, அதெல்லாம் முடியாது என்று எட்வினா மறுத்துப் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்ற, எட்வினாவை ஓங்கி அறைந்துள்ளார் முரளி. இதில், மயங்கிவிழுந்த எட்வினாவை முரளி கண்டுகொள்ளவே இல்லை. காலையில் போதை தெளிந்த முரளிக்குக் காத்திருந்தது அதிர்ச்சி.  இரவு மயங்கி விழுந்த நிலையிலேயே கிடந்த எட்வினாவைப் பதறிப்போய் எழுப்பியிருக்கிறார். அப்போதுதான் மனைவி இறந்துபோன விஷயமே முரளிக்குத் தெரிந்திருக்கிறது. பயந்துபோன அவர், தன் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போத்தனூர் போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இது, போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முரளியின் பதிலில் சந்தேகமடைந்த போலீஸார், விடாமல் விசாரித்ததில், இந்து முறைப்படி குழந்தைக்குப் பெயர் வைக்க எட்வினா  மறுத்ததால் இருவருக்கும் இடையே நேற்று இரவு சண்டை வந்ததாகவும், அப்போது நடந்த சண்டையில் அவர் இறந்துவிட்டதாகவும் முரளி ஒப்புக்கொண்டார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close