Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருவாய்த்துறை அலுவலர்கள் நடத்திய மண்டல அளவிலான தர்ணா

வருவாய்த்துறை அலுவலர்களின் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் ஒன்றுகூடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மண்டல தர்ணா போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் குமரேசன் தலைமைதாங்கினார்.

அப்போது பேசிய நிர்வாகிகள், '05.07.2017 அன்று, மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள்மீது ஆணை பிறப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக அறைக்கு முன்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய எட்டுப் பேர் மீது, துறை வாரியான நடவடிக்கையும் காவல்துறை நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அதே நேரத்தில், சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய எட்டு நபர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close