Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழு ஆதார சக்கரங்களின் தேவியர் பற்றி அறிவோம்

க்கரங்களினாலேதான் சகலமும் சுழல்கின்றன. மனித உடலும் சிக்கலின்றிச் சீராக இயங்கக் காரணம், ஆறு ஆதார சக்கரங்கள்தான். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா எனப்படும் ஆறு சக்கரம். இவை மட்டுமன்றி பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கும் சஹஸ்ராரம் என்னும் சக்கரம். இந்த ஏழு சக்கரங்களும் அவைகளின் சக்தியையும் சாதாரண மனிதர்களால் உணர்ந்துகொள்ளவே முடிவதில்லை. சக்கரங்களைத் தூண்டி, இறைசக்தியோடு இணையும் செயல் மாபெரும் ஞானியராலும், தெய்வநிலைபெற்ற மனிதர்களாலும் மட்டுமே சாத்தியமாகிறது. மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்துக்கு உயிர் சக்தியை ஏற்றும் பயிற்சிதான் குண்டலினி யோகம் எனப்படுகிறது. சக்தி, ஆதாரம் என்றாலே அம்பிகைதான் அல்லவா? ஆதார சக்கரங்களின் அதிபதியான தேவியரை அறிந்துகொள்வோம். ஏழு ஆதார சக்கரங்களின் தேவியர் என்று ஏழு பிரத்யேக தேவியர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களைத்தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். 

தேவியர்

*மூலாதாரம் - சாகினிதேவீ

*ஸ்வாதிஷ்டானம் - காகினீ தேவீ

*மணிபூரகம் - லாகினீதேவீ

*அனாகதம் - ராகினிதேவீ

*விசுக்தி - டாகினிதேவீ

*ஆக்ஞா - ஹாகினிதேவீ

*சஹஸ்ராரம் - ஆதிபராசக்தி

தேவியர்

இந்த ஏழு தேவியரை வழிபட்டே, ஞானியர்களும் யோகியர்களும் ஆதார சக்கரங்களை எழுப்பி ஆன்ம பலம் பெற்றனர். சாமானியர்களான நாம் ஞானியர்கள் அளவுக்குப் போகமுடியவில்லை என்றாலும், இந்த தேவியரை வணங்கி தியானத்தை மேற்கொண்டு, அமைதியான வாழ்வைப் பெறலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close