Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும்..! இனயம் துறைமுக ஆதரவாளர்கள் போர்க்கொடி

இனயம் சரக்குப் பெட்டக துறைமுகத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒத்துழைக்க மாவட்ட ஆட்சியர் மறுப்பதாக, துறைமுக ஆதரவு குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில், சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகம் அமைக்க மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது. துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, துறைமுகம் வரவேண்டும் என்று கூறும் ஆதரவாளர்கள் கூட்டம், ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அனைவரும் துறைமுகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

 

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான், ஒரு பிரிவினர் கடுமையாக இந்தத் திட்டத்தை எதிர்த்துவரும் நிலையில், ஆயிரக்கணக்கான போலீஸைக் கொண்டுவந்து நிறுத்தி ஆய்வு நடத்த முடியாது என்றார். இதற்கு, துறைமுக ஆதரவுக் குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தத் துறைமுகம் அமைவதற்கு மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் எதிராக உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியரை மாற்றவேண்டும். இல்லையென்றால், அவரை மாற்றுவதற்கு போராட்டம் நடத்தப்படும் என்று துறைமுக ஆதரவாளர்கள் தெரிவித்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close