Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தி.மு.க-வின் கோரிக்கையில் நியாயம் உள்ளது' - தங்க தமிழ்ச்செல்வன்

”பணம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்படி நாங்கள் நினைத்திருந்தால், எங்கள் பக்கம் எம்.எல்.ஏ-க்கள் வந்திருப்பார்கள்” என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தது, தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் எதிரணியினர் வளைத்துவிடக்கூடாது என்பதற்காக, கூவத்தூர் பாணியில் புதுச்சேரி தனியார் ”பீச் ரிசார்ட்டில்” தங்க வைக்கப்பட்டனர். அதையடுத்து, புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மாற்றப்பட்டனர். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் அங்கிருந்து ஏற்கெனவே தங்கியிருந்த ’விண்ட் ஃப்ளவர்’ ரிசார்ட்டுக்கு எம்.எல்.ஏ-க்கள் மாற்றப்பட்டனர்.

 

இந்நிலையில், ஒன்பதாவது நாளான இன்று, காலையில் வாக்கிங் செல்லும்போது செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “கவர்னர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தோம். அது தொடர்பாக, ஏழு நாள்களுக்குள் எங்களை அழைப்பதாக அவர் தெரிவித்திருந்தார். அவர் சொன்ன ஏழு நாள் கெடு இன்றுடன் முடிவடைகிறது. இன்றைக்குள் கவர்னர் எங்களை அழைத்துப் பேசாவிட்டால், அடுத்தகட்டமாக டெல்லி சென்று ஜனாதிபதியைச் சந்தித்து முறையிட இருக்கிறோம். பணத்துக்காக யாரும் இங்கு வந்து தங்கவில்லை. கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே சட்டமன்ற  உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாகப் புதுச்சேரியில் தங்கியிருக்கிறோம். பணம் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்படி நாங்கள் நினைத்திருந்தால், எங்கள் பக்கம் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற தி.மு.க-வின் கேள்வி நியாயமானது” என்று தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close